#தண்ணீர்
நின்று விழுந்தால் அருவி
படுத்துப் படர்ந்தால் ஆறு.
பாய்ந்து சீறினால் வெள்ளம்.
கிணற்றுக்குள் அமைதி
கடலிலே அடங்காத ஆர்ப்பரிப்பு.
பள்ளத்தைப் பார்த்து பாய்வதும்,
மேடுகளுக்குள் அடங்கிச் செல்வதும்,
விவசாயம் செழிக்க மழையாய் வந்து,
அனைத்து உயிர்களுக்கும் உதவிடு.