வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்..
காட்சியின் மாயத்தில் என்
கண்களை இழந்தேன்...
என் நிழலும் எனையே உதறும்
நீ நகரும் வழியில் தொடரும்..
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்...
மேகமோ அவள்
மாய பூ திரள்..
தேன் அலை சுழல்
தேவதை நிழல்... 💞
[ Vivek + SaNa + Pradeep Kumar + Ananthu ]
பூ அவிழும் பொழுதில் ஓராயிரம் கனா..
ஓர் கனவின் வழியில் அதே நிலா..
பால் சிரிப்பால்..
ஒளிப்பூ தெளித்தாள்..
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே..
மேகம் கூடும் நேரம் பூ மழையே..
என் மூச்சுக் குழலிலே உன் பாடல் தவழுதே..
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நனையுதே.. 💞
[ Vivek + SaNa + Pradeep Kumar]
நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே..
நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே...
உன்னோடு நெஞ்சம் உறவாடும்
வேளை..
தண்ணீர் கமலம் தானா...
முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே...
இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே...
[ GKB + Dhibu Ninan Thomas + Pradeep Kumar ]
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே..
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்..
காற்றிலே கால்கள் மிதக்கின்றதே
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே..
உன் பார்வையின் அர்த்தங்கள் எங்கு தான் தேடுவேன்... 💞
[ Arun Raja + SaNa + Pradeep Kumar ]
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய் உன் விழியே கேட்கிறேன்
உளியே உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
கார்குழல் கடவையே 💞
[ SaNa + Pradeep + Sriram P.Sarathy ]
உன்னோடு நான் சேர
தின்னேனே மண் சோறு...🍚
நேந்துதான் சாமிக்கு
விட்டேனே வெள்ளாடு... 🐐
ஆத்தோரம் காத்தாடும்
காத்தோடு நாத்தாடும்... 🌾🌾
நாம் காத்தாட்டமா
நாத்தாட்டமா ஒண்ணாகணும் நாளும்...🙈
நீ மாலை இடும் வேலை எது
கேட்குது என் தோளும்...🤷
[ப.பத்மினியும்] 🚕🚖
கண்களுக்கு கண் இமை சுமையா?
பூக்களுக்கு வாசனை வலியா?
பூமிக்குதான் மழை என்ன பகையா?
நீ எனக்கு...
என்ன சொல்ல ஏதோ ஓர் உணர்ச்சி...
உள்ளுக்குள்ளே ஒளி வட்ட சுழற்சி...
சோகத்திற்குள் ஒரு துளி மகிழ்ச்சி...
என்ன இது...
என்றென்றும் வாழ்க்கையிலே...
எது நடக்கும்...
எதும் நடக்கும்... 🎧
அலைகளை அலைகளை
பிடித்துக் கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை...
தனிமையில் தனிமையில் தவித்துக் கொண்டு
சௌக்கியம் அடைவது நியாயமில்லை...
கவலைக்கு மருந்து
இந்த ராஜ தவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்...
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை... 🎶🎧🎶
வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு...
மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா?
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு...
கரைகளின் மௌனம் என்றும் கலைத்ததுண்டா?
சொல்கின்ற மொழிகள் தீர்ந்து விடும்...
சொல்லாத காதல் தீர்வதுண்டா?
ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்...
அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்...
இதில் மிருகம் என்பது கள்ள மனம்...
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்... ✌️❤️
[கண்ணதாசன்]