Ravi (@tamilravi) 's Twitter Profile
Ravi

@tamilravi

Dravidian. I write mostly in Tamil about Politics in India/Tamil Nadu, Movies, Tech, and life.

ID: 2498181

calendar_today27-03-2007 14:26:16

37,37K Tweet

17,17K Takipçi

3,3K Takip Edilen

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

அதிமுக, பாஜக என்ன அட்டூழியம் செய்தாலும் பரவாயில்லை, சாதியும் மதமும் தான் முக்கியம் என்று நினைக்கிற கடைசி கூமுட்டை இருக்கிற வரை தமிழ்நாட்டில் திமுக தேவை.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

கட்சி, ஆட்சியை வைத்து வளமாக வாழ்பவர்கள் எல்லாம் கொள்கை குன்றுகளாக வலம் வருகையில், கொண்ட கொள்கைக்காக இணையத்தில் உருளும் உபிக்கள் 200 ரூபாய் கொத்தடிமை என்று பெயர் வாங்குவது தான் காலக்கொடுமை!

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

திமுக இன்னும் நிறைய செய்திருக்கலாமே என்று எண்ணினாலும், இப்போதிருக்க திமுகவாலேயே இவ்வளவு தான் செய்ய முடியும் என்றால் நமக்கு வாய்த்திருக்கிற மக்களாட்சிக் கட்டமைப்புக்குள் எந்த ஒரு கட்சியாலும் இவ்வளவுதான் உச்சபட்சமாக சாதிக்க முடியும் போல என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையை இப்போதே செங்கல்பட்டு வரை நீட்டிக்கலாம். எப்படியும் அதைக் கட்டி முடிப்பதற்குள் சென்னை நகரம் செங்கல்பட்டைத் தொட்டிருக்கும்.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

ஒரு உருப்படியான தலைவன் இல்லாதவிடத்து அதிமுக போன்ற ஒரு பெரிய கட்சி கூட சாதிக் கட்சியாகத் தான் சுருங்குமெனில், திமுகவின் இருப்பும் அதற்குக் கலைஞர் குடும்பத்தின் தலைமையும் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

பாஜக குறைந்தபட்சம் இந்துக்களுக்கு மட்டுமாவது நேர்மையாக இருந்திருக்கலாம். போயும் போயும் இரண்டு வணிகர்களிடம் நாட்டை விற்கவா இந்து சமயத்தின் பெயரால் மக்களை ஏமாற்ற வேண்டும்?

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

சாதி இருப்பதால் மதம் இருக்கிறதா? இல்லை, மதம் இருக்க வேண்டும் என்பதற்காகச் சாதி அழிந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்களா?

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

அதிமுகவில் இன்று இருக்கிற எந்த ஒரு தலைவருக்கும் தங்கள் சாதியினரைத் தாண்டி வேறு யாரையும் திரட்டிக் கொண்டு வரும் ஆளுமையில்லை என்பதே உண்மை. அதிமுக அரசியல் என்பது சாதிகளின் திரட்டாகவே இருந்திருக்கிறது. MGR, ஜெயலலிதா முகமூடி இருந்த வரை இது அம்பலப்படாமல் இருந்திருக்கிறது.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

2026க்குப் பிறகு தவெக என்கிற கட்சி இல்லாமல் போகலாம். ஆனால், தொடர்ந்து இது போன்று வருகிற புதுக் கட்சிகள் இளைஞர் ஆற்றலைத் திமுகவுக்கு எதிராகக் கூர்தீட்ட மட்டுமே பயன்படுகிறது. அவர்களுக்கு வயதும் அனுபவமும் கூடி திமுக பக்கம் திரும்பும் வரை அவர்கள் அரசியல் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

ஒரு குடும்ப ஆட்சி மக்களுக்கு எதிராக இருக்கும் போது, இலங்கையிலும் வங்கத்திலும் நடந்தது போல மக்களே அவர்களை நாட்டை விட்டு விரட்டியடிப்பார்கள். மாறாக, ஆட்சியிலேயே இல்லாத காங்கிரசையும் மாநிலக் கட்சிகளையும் குடும்ப ஆட்சி என்கிற பெயரில் ஒதுக்குவது அபத்தமானது.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

அரசியல் என்பதே எப்போதும் அதிகாரம், பணம், புகழ் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்ததே. அதனைக் கத்தியின்றி ரத்தமின்றிப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தமே மக்களாட்சி. இந்தக் குணங்களை எல்லாம் நீக்கிய அரசியலைத் தேடுவது என்பது vegetarian சிங்கத்தைத் தேடுவது போன்றது தான்.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

தீபாவளிக்கு இன்னும் நாள் இருக்கே? இப்ப ஜீ அறிவிச்சிருக்க GST வரிவிகித மாற்றம் தான் இந்த தீபாவளிப் பரிசா இல்லை வேறு எதுவும் special item இருக்கா?

தீபாவளிக்கு இன்னும் நாள் இருக்கே? இப்ப ஜீ அறிவிச்சிருக்க GST வரிவிகித மாற்றம் தான் இந்த தீபாவளிப் பரிசா இல்லை வேறு எதுவும் special item  இருக்கா?
Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

மனிதனும் ஒரு விலங்கு தான். உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதும் ஒரு விலங்கின் குணம் தான். சைவம், நனி சைவம் எல்லாம் தனி மனித விருப்பங்களாக இருக்கும் வரை பிரச்சினையில்லை. அதனாலேயே அவர்கள் உயர்ந்தோர் மற்றோர் தாழ்ந்தோர் என்று எண்ணுவது தான் பிரச்சினை.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

Timeline முழுக்க நாய்பிரியர்கள் vs மனிதப் பிரியர்கள் பஞ்சாயத்தா இருக்கு. நாய் பிரியர்களிடம் பேசிப் புரிய வைப்பதை விட நாய்களிடமே பேசிப் பஞ்சாயத்தைத் தீர்ப்பது எளிதாக இருக்கும் போல.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

The real ninja move in using AI is to build something that never existed before. Using AI to just do daily chores would not be a smart move, as everyone else would also be doing the same.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

இந்தியாவின் மேட்டுக்குடி வர்க்கம் என்பது மாமிச உணவு உண்ணும் வர்க்கமாக இருந்திருந்தால், இந்தத் தெருநாய் பிரச்சினை என்றோ முடிந்திருக்கும்.

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

It is hard to think of AI as either superintelligent or just mathematical crunching. Is human intelligence also just a bunch of electrical impulses? What is even the difference between real and artificial?

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

Every post we see on social media is determined by the likes we’ve given in the past. Every minute we live is designed by all the decisions we’ve made in the past. Is the life we live today just a result of the algorithm we have written?