Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile
Muhammad Basheer

@mohamedbasheerl

ID: 1252904681447268352

calendar_today22-04-2020 10:19:11

2,2K Tweet

1,1K Takipçi

1,1K Takip Edilen

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

யார் அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி, அவர்களில் எவருக்கிடையிலும் வேறுபாடு காட்டவில்லையோ அவர்களுக்கு, அவர்களின் கூலிகளை அவன் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான். அல் குர்ஆன் - 4 : 152

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

“மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து இத்தூதர் உண்மையுடன் உங்களிடம் வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்! (அதுவே) உங்களுக்கு நல்லது. நீங்கள் மறுத்தால், வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். அல் குர்ஆன் -4:170

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. மேலும் உங்களுக்குத் தெளிவான ஒளியை இறக்கியுள்ளோம். அல் குர்ஆன் - 4 : 174

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். (வணக்க வழிபாடுகள் மூலம்) அவன் பக்கம் நெருங்கும் வழியைத் தேடிக் கொள்ளுங்கள்! அவனது பாதையில் போரிடுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள். அல் குர்ஆன் - 5 : 35

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

இத்தூதர்மீது அருளப்பட்டதை அவர்கள் செவியுறும்போது, உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடுவதைக் காண்பீர். “எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே, எங்களைச் சாட்சி கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். அல் குர்ஆன் - 5 : 83

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை, தடை செய்யப்பட்டதாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். அல் குர்ஆன் - 5 : 87

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

ஷைத்தான் மதுவின் மூலமும், சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையே பகையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி, அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவே நாடுகிறான். எனவே நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? அல் குர்ஆன் - 5 : 91

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையாக இருங்கள்! நீங்கள் புறக்கணித்தால், தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதரின் கடமை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அல் குர்ஆன் - 5 : 92

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

எடுத்துரைப்பதைத் தவிர தூதர்மீது (வேறு) கடமையில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான். அல் குர்ஆன் - 5 : 99

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

கெட்டது அதிகளவு இருப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் “கெட்டதும் நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக! அறிவுடையோரே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல் குர்ஆன் - 5 : 100

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

“அல்லாஹ் அருளியதன் பக்கமும் தூதரின் பக்கமும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோரை நாங்கள் எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர் எதையும் தெரியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? 5 : 104

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ளவற்றின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றல் மிக்கவன். அல் குர்ஆன் - 5 : 120

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

வானங்களிலும் பூமியிலும் அவன்தான் அல்லாஹ். உங்கள் இரகசியத்தையும் வெளிப்படைத்தன்மையையும் அவன் அறிகிறான். நீங்கள் செய்வதையும் அவன் அறிகிறான். அல் குர்ஆன் - 6 : 3

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

“நீங்கள் பூமியில் பயணம் செய்யுங்கள்! பொய்யெனக் கூறியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனியுங்கள்” என்று கூறுவீராக! அல் குர்ஆன் - 6 : 11

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தை ஏற்படுத்தினால் அதை நீக்குபவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தினால், ஒவ்வொரு பொருளின்மீதும் அவன் ஆற்றல் மிக்கவன். அல் குர்ஆன் - 6 : 17

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் (நபியாகிய) இவரை அறிவார்கள். யார் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அல் குர்ஆன் - 6 : 20

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணும் அன்றி வேறில்லை. இறையச்சமுடையோருக்கு மறுமை வீடே மிகச் சிறந்தது. சிந்திக்க மாட்டீர்களா? அல் குர்ஆன் - 6 : 32

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

தூதர்களை நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிப்போராகவுமே நாம் அனுப்புகின்றோம். யார் இறைநம்பிக்கை கொண்டு, தம்மைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அல் குர்ஆன் - 6 : 48

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

தமது இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவதை அஞ்சுவோரை இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் இறையச்சமுடையோர் ஆவார்கள். அவர்களுக்கு அவனைத் தவிர பொறுப்பாளனோ பரிந்துரையாளனோ இல்லை. அல் குர்ஆன் - 6 : 51

Muhammad Basheer (@mohamedbasheerl) 's Twitter Profile Photo

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அவற்றை அறிய முடியாது. அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிகிறான். அவன் அறியாமல் ஓர் இலைகூட உதிர்வதில்லை. பூமியின் இருள்களிலுள்ள விதையும், பசுமையானதும், உலர்ந்ததும் தெளிவான ஏட்டில் இல்லாமலில்லை. அல் குர்ஆன் -6:59