விழுப்புண் பல சுமந்து வாளினை சுழற்றி சிரங்களை சீவி போர்க்களமே அஞ்சும்
வெற்றி நடை போடும் சூரனவன் ..
இளமயிலாளின்
மீன் விழிவீச்சு ஈட்டியாய் பாய அது மார்பை துளைத்து இதயம் சென்றடைந்து காதலும் கசிந்தோட ரத்தக்கரைகள் கண்டவன் அவள் முத்தத்தின் எச்சில் கறைக்கு ஏங்கினான்
அந்த சூராதிசூரன்