மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile
மாஸ்டர் பீஸ்

@kannan_twitz

உங்களின் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவன்! #Entrepreneur

ID: 3183242166

calendar_today02-05-2015 20:11:30

249,249K Tweet

78,78K Takipçi

822 Takip Edilen

🌹டாலியா🌹(இனியா) (@itzdahliaa) 's Twitter Profile Photo

ஒன்றை விட இன்னொன்னு சிறந்தது என்று எண்ணுவதை விட... ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் என்று புரிந்து கொண்டால் வாழ்க்கை அழகாகும்...!

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

ஏன் திரும்ப திரும்ப என்னிடமே வருகிறாய்… ஒரு கட்டத்திற்கு மேல் விலகிடத்தான் தூரம் செல்கிறேன் ஆனால் ஒரு தூரத்திற்கு மேல் திரும்பிட தோன்றுகிறது அதனால் உன்னிடமே வந்துவிடுகிறேன்! ஏனெனில் எனக்கு வர மட்டும்தான் தெரிந்திருக்கிறது போவதற்கு எந்த வழியும் தெரியவில்லை! நீ ஒரு வழிப்பாதை!!!

🔥யாழ்நிலா🔥 (@lachu_twitz) 's Twitter Profile Photo

நிரந்தரம் இல்லாத வாழ்வில் நிஜத்தை தேடுவதில் பயன் இல்லை

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

நாம சோகமா இருக்குறத கண்காணிக்குமளவுக்கு இந்த உலகம் அவ்வளவு வெட்டியாய் இல்லை எந்த ஆறுதலுக்கும் காத்திருக்காதீர்கள் எழுந்து போய் பொழப்ப பாருங்க…

🌹டாலியா🌹(இனியா) (@itzdahliaa) 's Twitter Profile Photo

உலகினை வெல்ல இரு "கை"கள வேண்டும்.... முகத்தில் புன்ன"கை"... அகத்தில் நம்பிக்"கை"...

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

நீயென் தூரத்து பிரியம் கடலை பார்த்து அமைதிகொள்வோம் அதனுள் சென்றால் தத்தளிப்போம்! காடுகளை பார்த்து பிரமிப்போம் அதனுள் சென்றால் பயந்து நடுங்குவோம்! தூரத்து விலங்குகளை பார்த்து சிரிப்போம் அருகில் சென்றால் அழுவோம்! போலத்தான் நீயும் நெருக்கம் ஆகாது நமக்கு! நீயென் தூரத்து பிரியம்!

சுகந்தீ! (@suganthyy) 's Twitter Profile Photo

பொருத்தமற்றதுடன் பொருந்தாதிருத்தல் வாழ்வின் மீட்சிகள் ! #தீtwitz

பொருத்தமற்றதுடன் 
பொருந்தாதிருத்தல்
வாழ்வின் மீட்சிகள் !

#தீtwitz
Mystery Man (@mm_officiial) 's Twitter Profile Photo

அவசரத்தில் எடுக்கும் எல்லா முடிவுகளும் தவறாக போவதில்லை ஒரு சில முடிவுகள் நமக்கு சாதகமாகவே அமையும்... இனிய காலை✨

ஆழி நிலா (@aazhi_nila) 's Twitter Profile Photo

பிரச்சனையை சரியாக வரையறுத்து விட்டால் கிட்டத்தட்ட தீர்வு நம்மிடமே இருக்கும்!

மதுமிதா கணபதி (@im_madhumithaa) 's Twitter Profile Photo

பசியென்றால் ஏதென உணரா வயதில்,பிடி கவளத்திற்கு கைவிரித்து நிற்பது போல்தான், நீயற்ற தனிமையிடம் மன்றாடி நிற்கிறேன் உனது அருகாமைக்காக ❤

பசியென்றால் ஏதென உணரா 
வயதில்,பிடி கவளத்திற்கு 
கைவிரித்து நிற்பது போல்தான், 
நீயற்ற தனிமையிடம் 
மன்றாடி நிற்கிறேன்
உனது அருகாமைக்காக ❤
மதுமிதா கணபதி (@im_madhumithaa) 's Twitter Profile Photo

முத்தம் தரும் வேளையெல்லாம் உன் வெட்கத்திற்கு சாமரம் வீசுவதாய், வளையும் கொலுசும் இம்சைப்புரிகிறது, கொஞ்சம் சொல்லக்கூடாதா மோனத்தின் மௌனயுத்தம் முத்தமென்று ❤ (ப்ரியனவன்)

முத்தம் தரும் வேளையெல்லாம் 
உன் வெட்கத்திற்கு சாமரம் 
வீசுவதாய், வளையும் கொலுசும் இம்சைப்புரிகிறது, கொஞ்சம் சொல்லக்கூடாதா மோனத்தின் 
மௌனயுத்தம் முத்தமென்று ❤
      (ப்ரியனவன்)
மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

பதம் தவறிய கசப்பு தேநீரை சிரித்துக்கொண்டே தருகிறது வாழ்க்கை… நமக்கென தயாரித்ததென சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டேன்! நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அது திணிக்கப்பட்டிருக்கும்! திணிக்கப்படுவதை காட்டிலும் ஏற்றுக்கொள்வது குறைந்தபட்ச ஆறுதலாக இருக்கிறது! ஏற்றுக்கொள்ளுங்கள்!!!

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

நினைவுகளில் வாழ்வதென்பது! கறிக்கடை வாசலில் வாசத்தை சுவைத்துக்கொண்டு உமிழ்நீரால் தன் பசியை நிரப்பும் நாயின் வாழ்க்கையை போன்றது! அந்த பசி முழுவதும் வெறுமையாலும் ஏமாற்றத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கும்!!!

மதுமிதா கணபதி (@im_madhumithaa) 's Twitter Profile Photo

மீண்டதோ மலரின் வாசம், வேண்டுதோ மகரந்த நேசம், கண்டிடும் விழிகளுக்கு இவைரெண்டும் உண்டென்றால், பார்வையால் பாசத்தை பகிர்வோமா என்னவளே ❤ (பிரியமானவன்)

மீண்டதோ மலரின் வாசம்,
வேண்டுதோ மகரந்த நேசம்,
கண்டிடும் விழிகளுக்கு 
இவைரெண்டும் உண்டென்றால்,  
பார்வையால் பாசத்தை 
பகிர்வோமா என்னவளே ❤
       (பிரியமானவன்)
மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

பொய் உங்களின் உண்மைகளை அலசி ஆராய்ந்து யோசிக்கிறேன் என நொந்துக் கொள்ளாதீர்கள்! பொய்கள் ஒரு வசியம்போல தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது அதனால கண்கள் எந்த ஆராய்தலும் யோசித்தலும் இல்லாமல் பற்றிக்கொள்கிறது! சடாரென ஒரு பொய்யை பற்றிக்கொள்ளத்தான் நான் பழக்கப்பட்டிருக்கிறேன்!!!

Laaffir🌙 (@selenophile1433) 's Twitter Profile Photo

அவள் தட்டச்சு செய்து அனுப்பிய குறுஞ்செய்தி எனக்கு குரல் பதிவாக அவள் குரலில் கேட்கிறது என் மனதிடம் நான் எப்படி சொல்வேன் அது வெறும் “Text” தான் என்று..! #வாழ்வியல்

🕋புதியவள்👸மஹாராணி🕌 (@nisha_umrah) 's Twitter Profile Photo

விலகி செல்வது வெறுப்பின் வெளிப்பாடு அல்ல"" மிகுந்த அன்பின் வெளிபாடக கூட இருக்கலாம்...!!! #Nishatwts👑

🤍அழகிய கவிதை 🕊️ (@saranyaaaraj) 's Twitter Profile Photo

நேசித்தவர்களை நேசித்தாயிற்று நேசிக்க தவறியவர்களையும் நேசித்தாயிற்று இனி வெறுப்பவர்களையும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்....✍

🕋புதியவள்👸மஹாராணி🕌 (@nisha_umrah) 's Twitter Profile Photo

#குர்ஆன்3:4 #மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன்னரும் வேதங்களை இறக்கினான் நன்மை தீமைகளை பிரித்து காட்டுகிறதையும் இறக்கிவைத்தான் ஆகவே.எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு அல்லாஹ் யாவரையும் மிகைத்தோன் தண்டிப்பவனாக இருக்கிறான்

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

கணம் நாம பெரும்பாலும் நடந்து முடிஞ்சதையும் நடக்கப்போறதையும் தான் யோசிச்சுட்டு இருப்போம்! கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் யோசிச்சுட்டு இருக்குற நேரத்துலதான் நிகழ்காலம் காணாமல் போகிறது! அந்தந்த பொழுதும் அந்தந்த கணமும்தான் வாழ்க்கை அதை முழுவதுமாக வாழுங்கள் அதுதான் இயற்கை!!!