V4 என்னும் அமைப்பு 2022க் கான சிறப்பு விருதை வாகை சந்திரசேகருக்கு வழங்கி சிறப்பித்தது. சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி சிறப்பிப்பார்கள். இந்த ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருதை வாகை சந்திரசேகருக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய பழமை புதுமை போற்றும் நாடக விழாவில் மத்த விலாசப் பிரகசனம் நாடகத்திறகு தலைவர் வாகை சந்திரசேகர் தலைமை ஏற்க கனிமொழி கருணாநிதி M P சிறப்புரை ஆற்றினார்.
பழமை புதுமை போற்றும் நாடக விழாவில் எம்.ஆர்.எம் பாலசுப்ரமணியன் குழுவினரின் வள்ளி திருமணம் நாடகம் வாணி மஹாலில் நடைபெற்றது. கலை பண்பாடுத்துறை செயலாளர் டாகடர் சந்திரமோகன்பி, இயக்குனர் சே.ரா.காந்தி, இயல் இசை நாடக மன்றதலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் விஜயா தாயன்பன் கலந்துகொண்டனர்.