மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile
மென்னிலா

@am_silentkiller

தேடலின் மதிப்பு கிடைக்கும் வரைக்கும் தான்....

உன் கற்பனையை என் மீது திணிக்காதே...
உன் கற்பனைக்கு அப்பாற்பட்டவள் நான்....

ID: 1386210589337276417

calendar_today25-04-2021 06:49:18

6,6K Tweet

1,1K Followers

198 Following

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

எதுவானாலும் சொல்லிவிட்டுப்போ உனக்கான காத்திருப்பு என் எல்லா செயல்களையும் சிதைத்துவிடுகிறது...

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

எழுத்துக்களின் மீது தனி ஆர்வம் வர காரணம் நாம் எண்ணிய வாழ்வினை நாம் மனதில் நினைத்ததை நாம் வாழ நினைத்ததை யாரோ ஒருவர் கற்பனை வடிவம் கொடுப்பாதால்....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

தூரம் கூடியிருக்கலாம் தொடர்புகள் குறைந்திருக்கலாம்.... பொறுப்புகள் கூடியிருக்கலாம் பரிமாறல்கள் குறைந்திருக்கலாம்.... எத்தனையோ மாற்றங்களுக்கு இடையிலும் மாறாத உறவு இது.... கனவுகள் காட்சிகளாய் மாற கை கோர்த்து உடனிருப்பேன்....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

வறண்ட சாலையோர பாதைகளில் யார் சுவடும் பதிவதில்லை... ஈர மண்ணிலே விட்டு சென்ற பாதம் பல காலம் அழிவதில்லை... மனதில் ஈரம் இருக்கு வரை விட்டுச்சென்ற சு"வடு"கள் இருக்கும்... வறண்ட மனமாயின் எதை பற்றியும் சிந்தனையுமில்லை எவர் பற்றியும் கவலையுமில்லை....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

நிழலாய் உன்னை பின் தொடந்ததும் இல்லை நிழற்படத்திலும் உன்னை கண்டதும் இல்லை நிஜ கண்களில் உன்னை காணும் முன்பே காதல் செய்தேன் உன்னுடன் வாழவே நிஜத்திலும் ஏங்குகிறேன்.....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

காதல் என்று நீ பெரிதாக ஒன்றும் செய்துவிட வேண்டாம் நான் தூங்கும் வரை பேசிக்கொண்டு இரு... இல்லை என் உளறலை சகித்துக் கொண்டு இரு அவ்வளவும் போதும் எனக்கு.....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

உங்கள் குறிஞ்செய்திக்கு பெறப்படும் விருப்பம் அது உரையாடலின் முற்று புள்ளி என புரியும் வேளையில் மனம் மொத்தமாய் சிதைந்திருக்கும்.... இந்த உலகம் சற்றே புரிந்திருக்கும்.....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

நான் நிலவை பற்றி பேசுகையில் நீயும் நிலவை பார்க்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல... என் உரையாடலோடு சேர்ந்து சற்று பயணித்தாலே போதுமானது....

யாத்திரி (@ikrthik) 's Twitter Profile Photo

உடனிருப்பேன் என்கிற வாக்குகள் பொய்யாகும்போது, ஒருபோதும் உன்னிடம் திரும்ப வரமாட்டேன் என்று சொல்லிச் சென்ற வாக்குகள் மட்டும்- பலிக்கவா போகிறது! வா. காத்திருக்கிறேன்.

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

எரிச்சல்களாலும் முரண்பாடுகளாலும் குவிந்த குப்பைகளுக்கு இடையில் தினமும் தேடுகிறேன் என் வாழ்விற்கான நிம்மதியை...

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

தனிமை நம்மை அரைப் பைத்தியமாக்குகிறது. அதிலிருந்து தப்பிக்க நாம் ஒரு துணையை நாடுகிறோம்... அவர்களோ நம்மை முழு பைத்தியமாக ஆக்கிவிடுகிறார்கள்...

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

காத்திருக்கிறேன்... ஒவ்வொரு பிறந்தநாளிலும் கிடைக்காது என்ன தெரிந்தும் யாரோ ஒருவரின் வாழ்த்திற்காக...

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

நிழலான பொய்யை மகிழ்வுடன் ஏற்கும் மனம் நிஜமான உண்மையை ஏற்றுக் கொள்வதில்லை....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

என் வாழ்க்கை புத்தகத்தை புரட்டி பார்க்கிறேன் என்னை அல்லாது பெரும்பாலும் பிறரே நிரம்பி வழிகிறார்கள்....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

கவிதையே உன்னைப்பற்றி எழுத வார்த்தைகள் தேடும் கவிதையடா நீ... உன்னிடம் பேச தெரியாமல் ஏங்குகிறது உன்னை மட்டுமே நினைத்து வாடும் எனது இதயம்....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

நான் கவனிக்காமல் போய் விடக் கூடும் என்றால் என்னை கவனிக்க வைக்க நீ ஏதேனும் செய்வதில் நியாயம் உண்டு.... நான் தான் காத்து கிடக்கிறனே‌....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

வேண்டிய நேரம் தீண்டாத மழை வேண்டாத நேரம் கொட்டித் தீர்த்ததற்காய் ஈரமற்றுப்போகுமா மண்... நேர்ந்து நின்றபோதும் நீளாது போனபோதும் நேசமென்பது ஈரம்... வாழ்வின் மாபெரும் பிடிமானம்....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகும் உன் மீதான காதல் எவ்வாராக இருந்ததோ அவ்வாரகவே இருக்கிறது உரையாடல் இருந்த போதும் இல்லாத போதும் நீ இல்லாத போதும் உன்னுடன் நான் இல்லாத போதிலும் ஆன இறுக்கத்தையும் நெருக்கத்தையும் உணர முடியும் என்பதை உன் காதல் உணர வைத்து விடுகிறது ....

மென்னிலா (@am_silentkiller) 's Twitter Profile Photo

யாரேனும் ஒருவரின் அழைப்பிற்கும் யாரேனும் ஒருவரின் சிறு குறுஞ்செய்திக்கும் ஏங்கும் அளவிற்கு வாழ்க்கை அத்தனை வெறுமையாய் இருக்கிறது...