Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile
Ďîvÿä Śřî♥️♥️♥️

@divyasri2019

நான் திவ்யா, தமிழ் என் தாய், தமிழ் நாடு என் தாய் மண். சிறு வயது முதலே கட்டுரை, பேச்சு போட்டி, பட்டி மன்றங்களில் பேசும் ஆர்வம் அதிகம். பரிசுகள் வென்றவள்

ID: 1154778278349066241

calendar_today26-07-2019 15:39:31

14,14K Tweet

105,105K Followers

94 Following

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

இரவு கனவில் உடன் வாழ்ந்த அவன் பகலில் தொலைந்து போனான் ! குணவாளனை கண்ணார கண்டேன் அவன் வாயார பேசியதை காதார கேட்டேன் நெஞ்சார தழுவினான் உள்ளம் உருகினேன் மனமார காதலித்தேன், காதலிக்கிறேன் , காதலிப்பேன் ! கனவுகளில் பயணிக்கும் நீ உலகில் கை கோர்ப்பது எப்போது ? பொற்காலை வணக்கம்

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

தைப்பூசம் மாசி மகம் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் ஐப்பசி சஷ்டி. இதெல்லாம் முருகர் கோவிலில் காலங்காலமாக குறிப்பிட்ட மாதங்களில் இலட்சம் மக்கள் கூடி எடுக்கும் விழாக்கள். அரசியல் விழாக்களல்ல. வாழ்க தமிழ் வெல்க தமிழ்நாடு -படித்ததில் பிடித்தது காலை வணக்கம்

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

காதலன்- காதலி தன்மானம் பார்ப்பதில்லை உண்மைக்காதல் தெய்வீக உறவு, அன்பை சொரியும் கோபத்திலும் அமைதி காக்கும் அமைதியில் காதலை பொழியும் தீய ஆசை கெடு சிந்தனைகள் போலி வேடம் ஏமாற்று வித்தை காம விழைவு இதற்கு அப்பாற்பட்டது காதல் காதலில் சரணடைந்தேன் காதல் காலை ❤️❤️❤️❤️❤️

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

என் இதய துடிப்பு உன் நினைவுகளின் நிகழ்வு உறங்கியும் விடியாத இரவுகள் முடிவில்லா கனவுகள் கலையாத உன் நினைவு உதயன் விளித்ததும் உன் வரவை எதிர் நோக்கி, புதியதோர் மகிழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வாய் என என் காத்திருப்பு எனக்கு விதிக்கப்பட்ட நீ ஒரு வரம் ! மதிய வணக்கம் ❣️❣️❣️❣️

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

பேருந்து நெரிசலில் அவன் சட்டையில் பூசியிருந்த திரவிய வாடை அவன் நெருங்கி வருவதை அறிவித்தது பதற்றத்தின் உச்சத்தில் நான் தூரத்தே ரசித்தவனை அருகே வரக்கண்டு அச்சம் கொண்டது மனசு இது காதல் துவக்க கால உணர்வுகள் பொற்காலை வணக்கம்

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

அவனிடம் ஏன் மயங்கி உருகுகிறேன்? வாழ்வின் மொத்தமும் கொட்டி கிடக்கு அவன் மடியில் ! காதலின் அகராதி அவன் எல்லா சூழலிலும் தோள் கொடுக்கிறான் நம்பிக்கைக்கு உவமையானவன் உள்ளத்தை பறி கொடுத்தேன் அவனிடம் காலை வணக்கம் ❤️

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

அவன் புன்னகையில் புதைந்து போனது என்னுள்ளம் பல்கலை வித்தகன் பங்கர் பஸ்டர் போல என் இதயத்தை துளைத்த அவன் பார்வை உண்டாக்கிய அனுக்கதிர் வீச்சு என் சிந்தையை ஊனமாக்கியது எனை மறந்தேன் ! தாங்கிப்பிடி வீழ விடாதே எனை விட்டுவிடாதே ! பொற்காலை வணக்கம்

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

எத்தனை காலத்துக்குதான் புருசனே பொறுப்புகளை சுமந்து உழைச்சு உழைச்சு நொந்து நூலாகனும்? ஒரு மாற்றத்துக்கு நாம சம்பாதிச்சு அவனை சுகமா வச்சுக்கலாம் ! கண்ணாளா வர நீ ரெடியா? முடியுமா? முடியாதா? காலை வணக்கம்

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

கனவு கலையவில்லை உறக்கம் கலைந்தது மேகங்கள் வழி விட உதயன் கதிர் வீசுகிறான் இமைகள் திறந்தது சில்லென்ற குளிர் காற்று பறவைகளின் தேன் கானம் பனியில் நனைந்த மலர்கள் எழ மனம் ஒப்பவில்லை போர்வையுள் புகுந்தேன் தலையனையில் புதைந்தேன் மீ்ண்டும் கனவில் மூழ்கி கண்ணாளன் மெதுவாக கொஞ்ச...

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

என் அனுமதிக்கு காத்திருக்கவில்லை இறுக அணைத்தான் அவன் விரல்கள் இதழ்களை கிள்ளின, வலிக்கவில்லை முத்தங்களில் கன்னங்கள் நனைந்தன ஏதோ முதன்முறை பார்ப்பது போல் மீண்டும் காதல் கணைகளை வீசுகிறான் காலை வணக்கம் ❤️❤️❤️❤️

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

அன்று தேநீர் விற்பனைகளத்தில் உன்னுடனான அமர்வு தியாலத்துளி மட்டுமே பேச வார்த்தைகள் கிட்டவில்லை வாயும் எழவில்லை உன் உதடுகள் உதிர்த்த காதல் மொழியை ரசித்தபடி என் கோப்பை காலியானது ருசி அறியாமலே! வசிக்கும் தொலைவு ஒரு பொருட்டல்ல கண்ணாளா நீ வாசம் செய்வது என்னுள்ளில்...

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

வாரி எடுக்கவில்லை கொத்தாக எடுத்தான் என்னை .... எனதுயிர், ஆன்மா, இதயம் அனைத்தையும்... நான் அவனில் வாழ்கிறேன்❤️❤️❤️❤️ காலை வணக்கம் ❤️❤️❤️❤️❤️

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

கவிதை சொன்னேன் அவன் செவி சாய்த்து கேட்டான் ரசித்தான் என் கவிதைகள் உணர்வுகளை வெளிப்படையாக அவனுடன் பேசவும், காதலனுடன் ஆழமான உண்மைத் தொடர்பை ஏற்படுத்தவும் ஒரு சிறந்த பாலம் காலை வணக்கங்க

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

அவன் சிரிக்கும் பொழுதெல்லாம் என்னை நான் பற்றிக் கொள்கிறேன் என் செய்வேன் என் வெட்கத்திற்கு நிறம் இல்லை ஓயாமல் ஓடி  கொண்டே இருக்கிறது .. கனவுகள் அவன் நினைவுகள்❤️❤️❤️❤️❤️❤️ பொற்காலை ❣️❣️❣️❣️❣️❣️

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

மன்னன் தேரில் வரவில்லை வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை ஏறி வரவில்லை மாற்றாய் பல குதிரைகள் திறன் கொண்ட விசையுந்தில் வந்திறங்கினான் அரிவைப் பருவப் பெண் எனைக் காண.. என்னுடல் வீசும் காந்தள் மலர் வாசம் காண...❤️❤️❤️❤️❤️ பொற்காலை ❤️❤️❤️❤️❤️

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

அவன் வருகை மனது விழாக் கோலம் தரித்தது தெரிந்தெடுத்த வண்ண வளையல்களை கை நிறைய பூட்டி மேனி மனக்க காத்திருக்கிறேன் பூத்துதிரும் நிலையில் இருக்கும் பூவில் தன் துணையாடு இன்ப உறக்கம் காணும் தேன் வண்டுகள் போல் நாழிகைகள் மறந்து பேசி மகிழ்ந்திட நீ வருவாய் என காலை வணக்கம்

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

கவிதை இன்றி யானும் இலள் கவிதை தானே உள்ளத் தொடர்பின் வழி உயிர் காக்கும் காதலை தமிழ் மொழி வளர்க்கும் எனை வளர்த்த தமிழ் வாழ்க இனம், மானம் காப்போம் பொற்காலை

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

காதல் பேசும் அவன் விழிகள் புன்னகை மாறா முக வடிவு அழகுக்கு அழகு சேர்க்கும் அருவா மீசை மயக்கும் கருப்பு தங்க நிறம் பார்த்ததும் அவனுடையதாகி காதலில் வீழ்ந்தேன் கணம் கூட மறப்பேனில்லை என் இதயமே அவனாகிப் போனான் அதன் இயக்கமுள்ள வரை அவன் நினைவு நீங்காதிருக்கும் வாடா கண்ணாளா

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

காதலில் விழுந்த பின் ஒன்றாக இருக்கும் போதெல்லாம் நான் முழுமையானதை உணர்கிறேன் நீ  அன்பு காட்டும் தருணங்களில் பாதுகாப்பை உணர்கிறேன். என் கரம் பற்றும் போதெல்லாம் என்னை உன்னில் இழக்கிறேன் சொர்க்கத்தை கண்டதில்லை அதை உன் காதலில் பார்க்கிறேன் காதலில் விழுவது சுகமானது

Ďîvÿä Śřî♥️♥️♥️ (@divyasri2019) 's Twitter Profile Photo

நீ என்னை முத்தமிட முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், என் இதயத் துடிப்பு தடுமாறுகிறது அத்து மீறல் வேண்டாம் என்கிறேன் நீ வேண்டும் என்கிறாய் போதும் உன் காதல் பேச்சு நின்று விடும் என் மூச்சு போதும் கண்ணாளா பொற்காலை வணக்கத்துடன் உங்கள் திவ்யா