வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profileg
வைரமுத்து

@Vairamuthu

கவிஞர் - பாடலாசிரியர்

ID:347861221

linkhttp://vairamuthu.in/ calendar_today03-08-2011 13:49:56

1,8K Tweets

516,2K Followers

0 Following

வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

வெண்சாமரம் வீசி
வரவேற்கிறோம் சித்திரையே!

உன்
வெப்பம் இல்லையேல்
செப்பம் ஏது?

பிற பருவங்களின்
பிழைகளையெல்லாம்
பழுது பார்க்கிறாய்

உணவுக்கு
உலை கூட்டுகிறாய்

கிருமிகளுக்கு
வெள்ளாவி வைக்கிறாய்

தாவர மர்மம்
எழுப்புகிறாய்

கனி கனிமம்
கனிவிக்கிறாய்

நீ
கோடையல்ல
கொடை

வெண்சாமரம் வீசி வரவேற்கிறோம் சித்திரையே! உன் வெப்பம் இல்லையேல் செப்பம் ஏது? பிற பருவங்களின் பிழைகளையெல்லாம் பழுது பார்க்கிறாய் உணவுக்கு உலை கூட்டுகிறாய் கிருமிகளுக்கு வெள்ளாவி வைக்கிறாய் தாவர மர்மம் எழுப்புகிறாய் கனி கனிமம் கனிவிக்கிறாய் நீ கோடையல்ல கொடை
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

உலக
இஸ்லாமியப் பெருமக்களுக்கு
இனிய ரமலான்
பெருவாழ்த்துக்கள்

ஈகையே திருநாளாகவும்
திருநாளே ஈகையாகவும்
திகழும் இந் நன்னாள்
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் -
வறியார்க்கொன்று
ஈவதே ஈகை  என்ற
உறுதிப் பொருளுக்கு
உகந்ததாகும்

தருவோர் பெறுவோர்
இருவரும்
வளமுற்று நலமுற்று வாழ்க

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

திராவிட அரசியல்
கலை இரண்டிலும்
கடைசி எச்சமாகிய மனிதர்
காலமாகிவிட்டார்

எம்.ஜி.ஆருக்கு உச்சம்
நாடோடி மன்னன்
ரஜினிக்கு உச்சம் பாட்ஷா
இரண்டு வெற்றிக்கும்
மூளையாக இருந்தவர்
முடிந்துபோனார்

எம்.ஜி.ஆர் என்ற
மூன்றெழுத்து உள்ளவரை
ஆர்.எம்.வீ என்ற
மூன்றெழுத்தும் நிலைக்கும்

ஆழ்ந்த இரங்கல்

திராவிட அரசியல் கலை இரண்டிலும் கடைசி எச்சமாகிய மனிதர் காலமாகிவிட்டார் எம்.ஜி.ஆருக்கு உச்சம் நாடோடி மன்னன் ரஜினிக்கு உச்சம் பாட்ஷா இரண்டு வெற்றிக்கும் மூளையாக இருந்தவர் முடிந்துபோனார் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து உள்ளவரை ஆர்.எம்.வீ என்ற மூன்றெழுத்தும் நிலைக்கும் ஆழ்ந்த இரங்கல்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

முதலமைச்சரோடு
தொலைபேசினேன்

பரப்புரைகளில் அவரது
குன்றாத குரல் உயரத்தையும்
கூடிவரும் கூட்டத்தையும்
கொண்டாடிச் சொன்னேன்

ஒற்றை நட்சத்திரமாய்
உலாவரும்
பெருமை சொன்னேன்

நாற்பதும்
நமதே என்றார்

கலைஞர் நூற்றாண்டுக்குப்
பெற்ற மகன் வழங்கும்
பெரும் பரிசு

முதலமைச்சரோடு தொலைபேசினேன் பரப்புரைகளில் அவரது குன்றாத குரல் உயரத்தையும் கூடிவரும் கூட்டத்தையும் கொண்டாடிச் சொன்னேன் ஒற்றை நட்சத்திரமாய் உலாவரும் பெருமை சொன்னேன் நாற்பதும் நமதே என்றார் கலைஞர் நூற்றாண்டுக்குப் பெற்ற மகன் வழங்கும் பெரும் பரிசு
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

சூரிய குலத்தில்
பிறந்த ராமன்
ராமச்சந்திரன் என்று
அழைக்கப்படுவது ஏன்?

சூரியனுக்குக்
களங்கம் இல்லை;
சந்திரனுக்கு உண்டு

வாலியை
மறைந்துநின்று கொன்ற
களங்கத்தால்தான்
அவன் ராமச்சந்திரன் என்று
அழைக்கப்படுகிறான்

இப்படிச் சொன்ன
இலக்கிய நேர்மையால்
இதயத்தில் வாழ்கிறார்
வாரியார்

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

கலைஞர் ஐயா!

உங்களை
நினைக்கும் போதெல்லாம்
நெகிழ்ந்து கூழாகிறது நெஞ்சு;
நீராழியாகும் கண்கள்

என்னை
வேரோடு வெட்டி எறியக்
கூரோடு கத்தி ஏந்தி
வஞ்சகம்
வளைக்கும்போதெல்லாம்
நீங்கள் இல்லாத குறையில்
நிலைகுலைகிறேன்

உங்கள் பழைய
காணொலி பார்த்தேன்
தமிழ் உன்படை
தடையை உடை என்கிறது
உங்கள் குரல்

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

களிறு குதிரை
தேர் காலாள் என்று
போர்ப்படையாய்
நாற்படை இருப்பினும்
அறத்தை முன்வைத்தே
போர்க்களம் புகுந்தது
தமிழினம்

தேர்தலிலும்
அந்த அறமே
வேண்டற்பாலது

ஏனெனில்,
ஆட்சி வடிவங்களில்
குறைந்த தீமை உடையது
ஜனநாயகம்தான்

மக்கள் இன்னும்
ஜனநாயகத்தை நம்புகிறார்கள்

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

ஒரு
மானைத் துரத்துகிறது சிங்கம்

எதன் ஓட்டம்
வேகமாக இருக்கும்?

சிங்கமா? மானா?

மானின் ஓட்டம் தான்

ஏனெனில்,
சிங்கம் துரத்துவது உணவுக்காக;
மான் ஓடுவது உயிருக்காக

தேர்தலிலும் அப்படித்தான்

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

ஜப்பானில் நிலநடுக்கமும்

இந்தோனேசியாவில்
எரிமலை வெடிப்பும்

தேர்தல் மேடைகளில்
இழிமொழிகளும்

அபூர்வமல்ல

ஆனால்,
மறைந்த தலைவர்களை
இழிப்பதும் பழிப்பதும்
ஏற்கத்தக்கவையல்ல

சிறுகூட்டம் ரசிக்கும்;
பெருங்கூட்டம் வெறுக்கும்

மேடை நாகரிகமும் உள்ளிட்டதே
தமிழர் பண்பாடு

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

பாரதிராஜா
ஜி.வி.பிரகாஷ், இவானா நடித்த
கள்வன் படம் பார்த்தோம்

அடர்ந்த காட்டுக்குள்
ஒரு பறவையாய்
நுழைந்துவந்த அனுபவம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு
பழைய நண்பர்கள் பலரைப்
பார்த்த பரவசம்

Bharathiraja | G.V.Prakash Kumar
Ivana

பாரதிராஜா ஜி.வி.பிரகாஷ், இவானா நடித்த கள்வன் படம் பார்த்தோம் அடர்ந்த காட்டுக்குள் ஒரு பறவையாய் நுழைந்துவந்த அனுபவம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள் பலரைப் பார்த்த பரவசம் @offBharathiraja | @gvprakash @i__ivana_ #Kalvan
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

காந்தி கிருஷ்ணாவின்
புதிய படம்

உடைந்த உறவுகளுக்கு
உறுதிப்பொருள் சொல்லுங்கள்;
வரிகளில்
வைரமுத்திரை பதியுங்கள் என்றார்

‘மழைக்காடு தீயோடு
எரிகின்றது’ என்று தொடங்கி

‘குறைகள் இல்லா
வாழ்வு சலிக்கும்
இருளும்கூடக்
குறைந்த வெளிச்சம்’
என்று முடித்தேன்

காந்தி
அகிம்சையாய்ச் சிரித்தார்

காந்தி கிருஷ்ணாவின் புதிய படம் உடைந்த உறவுகளுக்கு உறுதிப்பொருள் சொல்லுங்கள்; வரிகளில் வைரமுத்திரை பதியுங்கள் என்றார் ‘மழைக்காடு தீயோடு எரிகின்றது’ என்று தொடங்கி ‘குறைகள் இல்லா வாழ்வு சலிக்கும் இருளும்கூடக் குறைந்த வெளிச்சம்’ என்று முடித்தேன் காந்தி அகிம்சையாய்ச் சிரித்தார்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

ஒரு பெண்ணதிசயம்

நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின்
தேசிய கீதங்களை
அந்தந்த இசையோடு பாடுகிறார்
மாணவி சுபிக்‌ஷா

வியந்து போனேன்

ஒருபானை சோற்றுக்கு
இருசோறு பதம்

கேளுங்கள்

இவர்
ஓர் உலகக் குயில்

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தேர்தலுக்கு
வாழ்த்துப்பெற வந்தார்
திருச்சி வேட்பாளர்
தம்பி துரை வையாபுரி

தீயின் பொறி
திராவிட நெறி
தேர்தலே வெறி
திருச்சியே குறி
நிறைவெற்றி காண்பார்
துரை வையாபுரி

Durai Vaiko |

நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாழ்த்துப்பெற வந்தார் திருச்சி வேட்பாளர் தம்பி துரை வையாபுரி தீயின் பொறி திராவிட நெறி தேர்தலே வெறி திருச்சியே குறி நிறைவெற்றி காண்பார் துரை வையாபுரி @duraivaikooffl | #Election2024
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

டெக் மஹிந்திரா இயக்குநர்
டி.என்.மனோகரன் - டாக்டர் சுஜாதா
இல்லத் திருமணம்

மணமக்கள்:
சாஹினி
கிருஷ்ணகாந்த்

மகா கவிதையும்
மலர்களும் தந்தேன்

மணமகள் பாட்டு:

புத்தம்புது ஓலைவரும் - இந்தப்
பூவுக்கொரு மாலைவரும்
நந்தவனங்கள் பூமாலை கட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்
என்நேரம் கூடும்

டெக் மஹிந்திரா இயக்குநர் டி.என்.மனோகரன் - டாக்டர் சுஜாதா இல்லத் திருமணம் மணமக்கள்: சாஹினி கிருஷ்ணகாந்த் மகா கவிதையும் மலர்களும் தந்தேன் மணமகள் பாட்டு: புத்தம்புது ஓலைவரும் - இந்தப் பூவுக்கொரு மாலைவரும் நந்தவனங்கள் பூமாலை கட்டும் நட்சத்திரம் அட்சதைகள் போடும் என்நேரம் கூடும்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

சிங்கீதம்
சீனிவாசராவை முன்வைத்து
ராஜபார்வையின்
நினைவுத் தேரோட்டம்
நேற்று நடந்தது

காற்றும் கலையும்
பழையதாவதில்லை

ராஜபார்வை என்றும் இனியது
பார்ப்பதற்கும்;
நினைத்துப் பார்ப்பதற்கும்

நன்றி திரு. கமல்

உடன்
மணிரத்னம்
பருண் முகர்ஜி

Kamal Haasan

சிங்கீதம் சீனிவாசராவை முன்வைத்து ராஜபார்வையின் நினைவுத் தேரோட்டம் நேற்று நடந்தது காற்றும் கலையும் பழையதாவதில்லை ராஜபார்வை என்றும் இனியது பார்ப்பதற்கும்; நினைத்துப் பார்ப்பதற்கும் நன்றி திரு. கமல் உடன் மணிரத்னம் பருண் முகர்ஜி @ikamalhaasan #Rajapaarvai
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

சிங்கப்பூரில்
மகாகவிதை அறிமுகவிழா

டத்தோஸ்ரீ சரவணன்
சிங்கப்பூர்
முன்னாள் எம். பி தினகரன்
பேராசிரியை சரோஜினி
இறை.மதியழகன்
ஜி.வி.ராம், அருமைச்சந்திரன்
உடனிருந்தனர்

‘காலந்தோறும் பாடுபொருளைக்
காலத்திடம்
கற்றுக்கொள்ளளும் தமிழ்
இன்று மகாகவிதை மூலம்
அறிவியலைக்
கவர்ந்துகொண்டது’ என்றேன்

சிங்கப்பூரில் மகாகவிதை அறிமுகவிழா டத்தோஸ்ரீ சரவணன் சிங்கப்பூர் முன்னாள் எம். பி தினகரன் பேராசிரியை சரோஜினி இறை.மதியழகன் ஜி.வி.ராம், அருமைச்சந்திரன் உடனிருந்தனர் ‘காலந்தோறும் பாடுபொருளைக் காலத்திடம் கற்றுக்கொள்ளளும் தமிழ் இன்று மகாகவிதை மூலம் அறிவியலைக் கவர்ந்துகொண்டது’ என்றேன்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

மலேசியாவில்
மகா கவிதைக்குப்
பெருந்தமிழ் விருதாக
1லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது;
இந்திய மதிப்பில்
ரூபாய் 18லட்சம் ஆகும்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
டத்தோஸ்ரீ சரவணன்
வழங்கினர்

தமிழில் எது இல்லை என்ற
கேள்விக்குப் பதில்தான்
மகா கவிதை

தமிழர்கள் இதுகுறித்து
உரையாடுவார்கள் என்றேன்

மலேசியாவில் மகா கவிதைக்குப் பெருந்தமிழ் விருதாக 1லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது; இந்திய மதிப்பில் ரூபாய் 18லட்சம் ஆகும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினர் தமிழில் எது இல்லை என்ற கேள்விக்குப் பதில்தான் மகா கவிதை தமிழர்கள் இதுகுறித்து உரையாடுவார்கள் என்றேன்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

In Malaysia, ‘Maha Kavithai’ received an award of 1Lakh Ringgit, a sum equal to 18Lakh Rupees.

Malaysian Tamil Development Council and Tamil Linguistic Forum together conferred this award and was presented to me by TanSri Vigneshwaran and Dato Sri Saravanan.

Tamil’s Triumph!

In Malaysia, ‘Maha Kavithai’ received an award of 1Lakh Ringgit, a sum equal to 18Lakh Rupees. Malaysian Tamil Development Council and Tamil Linguistic Forum together conferred this award and was presented to me by TanSri Vigneshwaran and Dato Sri Saravanan. Tamil’s Triumph!
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

மலேசிய இந்தியர் காங்கிரசின்
தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனை
இல்லத்தில் சந்தித்து
அன்பு செலுத்தினேன்

தேசியத் துணைத்தலைவர்
டத்தோஸ்ரீ மு.சரவணன் உடனிருந்தார்

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின்
எதிர்காலம் பிள்ளைகளின் எண்ணிக்கையில் இருக்கிறது
என்றனர் தலைவர்கள்

மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனை இல்லத்தில் சந்தித்து அன்பு செலுத்தினேன் தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன் உடனிருந்தார் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் பிள்ளைகளின் எண்ணிக்கையில் இருக்கிறது என்றனர் தலைவர்கள்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

ஒரு ஜப்பானியர்
77 வயது இளைஞர்
என் பாடலொன்றைப் பாடி
என்ன போடு போடுகிறார் பாருங்கள்

கடல் கடந்து மொழி கடந்து
இடம் கடந்து இனம் கடந்து
தடம்பதிக்கும் தமிழ்கண்டு
தடந்தோள் விரிகிறது நமக்கு

ஆடிப்பாடும் அவரோடு
கூடிப்பாடும் குழந்தையானேன்

இனி... நீங்களும்

account_circle