🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profileg
🤍அழகிய கவிதை 🕊️

@SaranyaaaRaj

I Know My Worth 🤫 #சரண்2020 ✨ Likes 💙

https://t.co/z43O8Cqh7r

ID:805752292079190016

calendar_today05-12-2016 12:34:51

361,7K Tweets

54,5K Followers

498 Following

🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

'என்ன பண்ற' என்கிற குறுஞ்செய்திகள் பொதுவாக உளவு பார்க்க வருவதில்லை நீண்ட மௌனத்தை கலைத்துவிட்டு இளைப்பாற வருகிறது....✍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை
ஒரு நல்ல நம்பிக்கையை சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் !!

~ஜெயகாந்தன்

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

இந்த எண்பது வயது குழந்தைகள் என்ன செய்கிறார்கள்

பத்து நிமிடம் முன் சொன்னதையே மறுபடியும் சொல்லி

பத்து நிமிடம் முன் கேட்டதை போல ஆச்சரியமாக கேட்க வைத்து

உள்ளிருக்கும் வேஷம் தரிக்காத நல்ல நாடகதாரியை வெளிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்....✍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

புத்தகமும்
ஓவியமும்
கவிதையும்
ஆட்சி செய்யும் தருணம்
தனியறை
நீண்ட மௌனம்
மெலிதான இசை
உயிருக்கு உணவாகிறது....✍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

சந்திப்பின் தித்திப்பில் திளைத்திருக்கும் கண்கள்
அன்பை பருகி முடிக்கும் வரை
மேஜை மீதிருக்கும் கோப்பைகள் காத்திருக்கத்தான் வேண்டுமென்பது இந்த நேசத்தின் கட்டளை....✍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

இப்பொழுதெல்லாம்

நிலைக்குமா நிலைக்காதா என்ற ஏக்கமோ தவிப்போ இருக்கவில்லை

இருப்பதெல்லாம்

இருப்பது இருந்துவிட்டு போகட்டும்

இல்லாதது மன பரணில் இருக்கட்டுமென்ற மனநிலை தான்....✍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

கோபத்தில் சிவந்த உன் ‌கண்கள்
என்ன உரைத்தாலும் அதன் உறைப்பு உச்சிக்கேறுவது போல
அப்படியொன்றும் உறைப்பதில்லை மிளகு ரசத்தோடு சிக்கன் பக்கோடா உட்கொள்வதை போல உச்சுக்கொட்டத்தான் வைக்கிறது....✍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

உதிர்ந்த இதழ்களை திரட்டியெடுக்கும் திராணியற்றவர்கள்

கையில் எஞ்சியிருக்கும் ரோஜாக்களை கண்டபடி காத்திருப்பை தொடர்வார்களாம்....✍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

ஒரு மழைக்காலத்தில் வெயிலை கண்டதை போல
ஒரு வெயில் காலத்தில் மழைத்துளியை ஸ்பரிசிப்பதை போல இயல்புக்கு மாறான ஒன்றை நாடியே இந்த மனம் பித்துகொள்கிறது....✍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

எதற்காக இந்த காதல் என்றாள் தோழி ஒருத்தி
ஓராயிரம் கத்தி முனை உடலை சல்லடையாக்குவதை போன்றதொரு உணர்வு உண்டாகுமாமே உண்மையாய் நேசித்து பிரிய நேர்ந்தால் அதற்கு தான் என்கிறேன் சிரித்துக்கொண்டே....✍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

அட ஆமால நான் கொய்ந்தைனு மறந்துட்டேன் ஞாபகப்படுத்துனதுக்கு அன்புகள் பலகோடி ராஜ மாதா ✨🦋🤩

அட ஆமால நான் கொய்ந்தைனு மறந்துட்டேன் ஞாபகப்படுத்துனதுக்கு அன்புகள் பலகோடி ராஜ மாதா ✨🦋🤩
account_circle