ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profileg
ஜா.வி

@thisiswatigot

இன்றைக்காக வாழ்வேன்
நாளையும்
இதே கதைதான்

ID:3130036639

linkhttps://twitter.com/search?q=from%3Athisiswatigot%20-filter%3Amentions&s=09 calendar_today02-04-2015 11:11:41

18,4K Tweets

26,7K Followers

459 Following

ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

முன்முடிவுகளுடனும்
நிபந்தனைகளுடனும்
நீங்கள்
நினைக்கையில்
நானொரு ஏமாற்றம்.

-வழிப்போக்கன்

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

எந்தத் தடயத்தையும்
விட்டுச்செல்லாமல்
மறைவதும் வரம்!

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

எங்கு பெய்யும் மழையிலும்
ஒரு துளி
எனதுடல், என் மனம்
நனைப்பதற்கிருக்கும்.
எங்கு மலரும் ஒரு சிறு பூவிலும்
எனக்கென ஒரு துளி
மது நிறைந்திருக்கும்.

-வண்ணதாசன்

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

நீ இட்ட நிறுத்தற்புள்ளியைச் சுற்றி
பெருகும் பிரிவின் நீர்மையை
உண்டு வளர்கிற இச்செடிக்கு
உன் கழுத்து நரம்பின் பச்சையம்.

கதிர்பாரதி

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

நீர் வற்றிய
ஆற்றில் இன்னமும்
கற்களையெறிந்து
கொண்டிருக்கிறார்கள்
சொற்கள் வற்றாத
சுடுமனதின்
சலன வட்ட
முக்கோண அலைகளோ
எறிந்தவரை விட்டு
வந்தடைகின்றன
எனையே கவிதையாய்
பெருகிக்கொண்டே

-ஜான்சி

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

ஓவியத்தில் சொல்லியதை
வார்த்தைகளில் விவரிக்க
எந்த மொழியிலும்
சொற்கள் இல்லை.

-வான்கா

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

ஆகத் துல்லியமான
ஓர் சொல்லை அடைவதே
கவிஞனின் சவால்!

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

இனி பிரமிக்கவோ
ஒப்புக் கொடுக்கவோ
எதுவுமில்லை
என்கிற வெறுமைதான்
மெச்சூரிட்டி.

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

நாம் எல்லோருமே
பிரபலமடைய
விரும்புகிறோம்.

ஏதோ ஒன்றாக ஆக
நினைக்கும் அக்கணமே

நம் சுதந்திரத்தை நாம்
தடை செய்து விடுகிறோம்.

ஜேகே

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

சொற்களினின்றும் விடுபட்ட பின்னும் அர்த்தங்களிலிருந்து விலகிய பிறகும் அங்கே இன்னும் மிஞ்சி இருப்பதே கவிதை.

-யாங் வான் லீ

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

A man can be himself only so long as he is alone; and if he does not love solitude, he will not love freedom; for it is only when he is alone that he is really free.

-Arthur Schopenhauer

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

எழுதி முடிக்கிற ஒவ்வொரு சமயமும் எழுதியதைக் காட்டிலும் எழுத வேண்டியது அதிகமாக இருப்பது போலச் சமீபத்தில் தோன்றுகிறது. நேற்றுப் புரிந்ததைவிட இன்று வாழ்வையும் நேற்று எழுதியதைவிட இன்று மனிதர்களையும் சரியாகப் புரியவும் எழுதவும் முடிகிறது.

-வண்ணதாசன்

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

தோல்வியின் புலம்பல்கள் இன்றி
வெற்றிக்களிப்பின்
கொக்கரிப்புகள் ஏதுமின்றி
ஆரவாரம் செய்யாமல்
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
வந்ததும், போனதும் தெரியாமல்,
ஒரு சிறு உயிரென
வாழ்ந்துமுடிக்கத்தான் பிடித்திருக்கிறது.

யாத்திரி

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

இயல்பாக இருத்தல் என்பது
நடைபாதை போன்றது.
அது மக்கள் நடந்து செல்ல
வசதியானது. ஆனால், ஒருபோதும்
அங்கே மலர்கள் மலர முடியாது.

-வான்கா

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

இளமையில் வேட்கையுடன் தொடங்கிய வாழ்வு மெல்ல மெல்ல நிதானத்திற்கு வருகிறது. அடுத்து என்ன,
அடுத்து என்ன என எதையாவது கணந்தோறும் எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருந்த
பொழுதுகள் வடிந்து,
வாழ்க்கையில் எதுவும் நடக்காமல் இருப்பதற்காகக் காத்திருக்கும் காலம் நெருங்குகிறது.

கோகுல்

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

சுவாரஸ்யங்கள் தீர்வதில்லை,
அவற்றைப் பகிர்வதற்கான
ஆர்வங்களே தீர்கின்றன.

-யாத்திரி

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

எல்லாவற்றையும் எல்லாரையும்
புரிந்துக் கொள்ளுதல்
ஆரம்பத்தில் மட்டும் வரம்.

account_circle
ஜா.வி(@thisiswatigot) 's Twitter Profile Photo

எத்தனைத் துயரம்
தருவதாக இருந்தாலும்,
படைப்பு மனநிலையைத் தக்கவைத்துக்கொள்வதே
எழுத்தில் புழங்குபவனின் கனவு.

account_circle