🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profileg
🌴 T.R.🌴

@TRAMESH21548526

முடி சார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பல்

ID:822279705650864129

calendar_today20-01-2017 03:08:53

42,5K Tweets

15,6K Followers

756 Following

🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

அப்படியே இருங்கள்
அப்படியே இருப்பதில்
நம்பிக்கை உண்டெனில்.

~ கல்யாண்ஜி ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

பிறருக்காக அல்ல,
உனக்காக கூட
எந்தவொரு இடத்திலும்
நீ உன் முகத்தை இழக்க கூடாது.

ஒரு முறை இழந்து விட்டால்
உனக்காக பல முகமூடிகள் காத்திருக்கும்.

~ மவுனா ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

நான் வேண்டிக் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
கொஞ்சம் கெளரவமான
சவ அடக்கமும்,
சுற்றி சில நண்பர்களும்தான்.

~ ஹரிசங்கர் ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

காடு நீங்கிய வேதனையின்
சுமை போதாதென
எந்நேரமும் வயிற்றில் எரியும்
கொடும்பசியும் சுமந்து
தன்னுடல் சுமக்கும் சாபமும்
பெற்றபடி தலைகீழாய் நின்று
வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது
கருங்குன்றென நிற்கும்
யானையொன்று.

மனிதனை நம்பிய ஒரே
குற்றத்திற்காக...!!

~ கி.சரஸ்வதி ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

உரிமை கிடைக்கும்
இடத்தில்
உறவாக நின்று விடுங்கள்.

உரிமை கிடைக்காத
இடத்தில் ஓரமாக கூட
நின்று விடாதீர்கள்.

நற்காலை....🙂🌺

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

சிரிப்புதான்.....
கனமடைந்து கண்ணீராகிறது.

~ கவிக்கோ ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

வாழ்தல் எளிதல்ல
வாழ்ந்தாக வேண்டுமெனில்
எதுவும் புதிதல்ல...!!

~ கவி ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

உங்களைப்
பிடித்துப் போனதற்கு
என்ன காரணமோ,
அதே தான்
பிடிக்காமல் போனதற்கும்.

~ பாலாஜி ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

பெருந்துயரிலிருக்கும் ஒருவரை விட்டுச்செல்வது எளிதல்ல.
உடனிருப்பது அதைவிட கடினம்.
அங்கே உரிய சொற்கள் என ஏதுமில்லை.
அப்போது எச்சொல்லும் பொருத்தமற்றவையே.
ஆனால்
நா மீறி எழும் சொற்கள் இயல்பாகவே அத்தருணத்தில் அமைந்து உரிய பொருள் கொள்வதும் உண்டு.

~ ஜெயமோகன் ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

சில பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல்
அவமதித்துத்தான்
தீர்க்க வேண்டும்.
அதுவே புத்திசாலித்தனம்!

~ வெ.பூபதி ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

வேலைச் சுமைக்கு
இடையில் அருந்தும்
ஒவ்வொரு தேநீரிலும்
கடவுளின் உரையாடல்
கலந்திருக்கிறது.

~ நாடன் சூர்யா ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

சேர்த்து வைப்பதையும்
பிரித்து வைப்பதையும்
காரணமின்றி
காலம் செய்வதில்லை.

நற்காலை...🙂🌺

account_circle