Idam valam(@Idam_valam) 's Twitter Profileg
Idam valam

@Idam_valam

Welcome to IDAM VALAM, where we discuss everything from society and economy to history and politics. Join us and enrich your understanding.

ID:1649873054699499520

linkhttps://youtube.com/@idamvalam calendar_today22-04-2023 20:29:36

14,1K Tweets

2,5K Followers

1 Following

Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

பிரதமர் மோடிக்கு இனி பேச எதுவுமே இல்லை என்பதால் நேரு பற்றி பேசி வருகிறார். இண்டி கூட்டணி 300 இடங்களை வென்று ஆட்சி அமைத்துவிடும் என அவருக்கு தெரிந்துவிட்டது. பாஜகவால் 240 இடங்களை கூட வெல்ல முடியாது: பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

பிரதமர் மோடிக்கு இனி பேச எதுவுமே இல்லை என்பதால் நேரு பற்றி பேசி வருகிறார். இண்டி கூட்டணி 300 இடங்களை வென்று ஆட்சி அமைத்துவிடும் என அவருக்கு தெரிந்துவிட்டது. பாஜகவால் 240 இடங்களை கூட வெல்ல முடியாது: பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் #TejashwiYadav #BJP #NarendraModi
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியா குற்றம் செய்திருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதை அரசு தரப்பு நிரூபித்து இருக்கிறது. ஆனாலும் மணீஷ் சிசோடியா ஒவ்வொரு வாரமும் தன் மனைவியை பார்க்க அனுமதிக்கப்படலாம்: டில்லி உயர்நீதிமன்றம்

அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியா குற்றம் செய்திருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதை அரசு தரப்பு நிரூபித்து இருக்கிறது. ஆனாலும் மணீஷ் சிசோடியா ஒவ்வொரு வாரமும் தன் மனைவியை பார்க்க அனுமதிக்கப்படலாம்: டில்லி உயர்நீதிமன்றம் #ManishSisodia
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

சிபிஐ வழக்கில் ஜாமீன் கோர மணீஷ் சிசோடியா, அவரது மொபைலை விசாரணையின் போது ஒப்படைக்காமல், அது உடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் அவர் சாட்சிகளை மிரட்டவும் வாய்ப்புள்ளது, ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது என தெளிவாகிறது: டில்லி உயர்நீதிமன்றம்

சிபிஐ வழக்கில் ஜாமீன் கோர மணீஷ் சிசோடியா, அவரது மொபைலை விசாரணையின் போது ஒப்படைக்காமல், அது உடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் அவர் சாட்சிகளை மிரட்டவும் வாய்ப்புள்ளது, ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது என தெளிவாகிறது: டில்லி உயர்நீதிமன்றம் #ManishSisodia
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தாக்கல் செய்த வழக்குகளில் டில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏவுமான மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தாக்கல் செய்த வழக்குகளில் டில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏவுமான மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. #DelhiHighCourt #ManishSisodia
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு 2025ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானாவில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் உதய் நாகராஜூ, அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். இவர் தற்போது AI Policy Labs நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு 2025ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானாவில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் உதய் நாகராஜூ, அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். இவர் தற்போது AI Policy Labs நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார். #AIPolicyLabs #UdayNagaraju
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

என்னை சிறையில் அடைக்க அனைத்து அமைப்புகளையும் பிரதமர் மோடி பயன்படுத்தினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்து, அனைத்து பழங்குடியின மக்களுக்கும் மோடி சவால் விடுத்துள்ளார்: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

என்னை சிறையில் அடைக்க அனைத்து அமைப்புகளையும் பிரதமர் மோடி பயன்படுத்தினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்து, அனைத்து பழங்குடியின மக்களுக்கும் மோடி சவால் விடுத்துள்ளார்: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் #ArvindKejriwal
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

ஜப்பானின் கோபேயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

தொடர் மழை காரணமாக கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளிப்பதற்கு வரும் 23ம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது. மாசிலா அருவி, நம்ம அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளிப்பதற்கு வரும் 23ம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது. மாசிலா அருவி, நம்ம அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Kollimalai #HeavyRainfall
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தான் வெளியிட்ட வீடியோவை பிரபல யூ-டியூபர் இர்பான் நீக்கியுள்ளார். இர்பான் வெளியிட்ட வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை கடிதம் எழுதிய நிலையில் அவரே அந்த வீடியோவை நீக்கியுள்ளார். Views

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தான் வெளியிட்ட வீடியோவை பிரபல யூ-டியூபர் இர்பான் நீக்கியுள்ளார். இர்பான் வெளியிட்ட வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை கடிதம் எழுதிய நிலையில் அவரே அந்த வீடியோவை நீக்கியுள்ளார். #IrfanViews #Irfan #Youtube #TNGovt
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

ஹரியானாவும், பஞ்சாப் மாநிலமும் வளமான மாநிலங்களாக கருதப்பட்டும், அங்கு இன்னும் வேலையின்மை & பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. தன் அரசின் 10 ஆண்டு கால பணி குறித்து பேசாமல், நாள் முழுவதும் காங்கிரஸை வசைபாடிக்கொண்டே இருக்கிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

ஹரியானாவும், பஞ்சாப் மாநிலமும் வளமான மாநிலங்களாக கருதப்பட்டும், அங்கு இன்னும் வேலையின்மை & பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. தன் அரசின் 10 ஆண்டு கால பணி குறித்து பேசாமல், நாள் முழுவதும் காங்கிரஸை வசைபாடிக்கொண்டே இருக்கிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே #Congress
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் பயணித்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் பயணித்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். #SingapreAirlines
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

டிடிவி தினகரன் RSS அமைப்பின் புதிய விசுவாசியாக மாறியிருக்கிறார். பாஜகவினர் சொல்லாத கதைகளை எல்லாம் இவர் சொல்வது வேதனை அளிக்கிறது. இதற்கு பேசாமல் அவர் தனது அமமுகவை பாஜகவில் இணைத்துவிடுவது மேலாக இருக்கும்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

டிடிவி தினகரன் RSS அமைப்பின் புதிய விசுவாசியாக மாறியிருக்கிறார். பாஜகவினர் சொல்லாத கதைகளை எல்லாம் இவர் சொல்வது வேதனை அளிக்கிறது. இதற்கு பேசாமல் அவர் தனது அமமுகவை பாஜகவில் இணைத்துவிடுவது மேலாக இருக்கும்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் #ManickamTagore #Congress @manickamtagore
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

இலங்கை நடுக்குடா பகுதியில் முன் அறிவிப்பின்றி தங்களுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்தில், மின்சார முள்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதால், 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமத்திற்கு எதிராக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இலங்கை நடுக்குடா பகுதியில் முன் அறிவிப்பின்றி தங்களுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்தில், மின்சார முள்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதால், 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமத்திற்கு எதிராக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். #Srilanka #AdaniGroup
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

மதுரையில் ரூ.218.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளிவந்துள்ளன.

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கபட்ட விவகாரத்தில் 492 நாட்கள் விசாரித்த பிறகும், மேலும் 1 மாத காலம் விசாரணைக்கு அவகாசம் கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் CBCID போலீசார் மனு தாக்கல் செய்துள்ளது.

வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கபட்ட விவகாரத்தில் 492 நாட்கள் விசாரித்த பிறகும், மேலும் 1 மாத காலம் விசாரணைக்கு அவகாசம் கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் CBCID போலீசார் மனு தாக்கல் செய்துள்ளது. #Vengaivayal #CBCID
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் விலை ரூ.10 லட்சம் என்றும், அவர் பெண் தானா என்று தனக்கு சந்தேகம் எழுவதாகவும் பேசி பிரச்சாரம் செய்த தம்லுக் தொகுதி பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய்க்கு, பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் விலை ரூ.10 லட்சம் என்றும், அவர் பெண் தானா என்று தனக்கு சந்தேகம் எழுவதாகவும் பேசி பிரச்சாரம் செய்த தம்லுக் தொகுதி பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய்க்கு, பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #WestBengal
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

வரும் 23ம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, மத்திய அரசு விடுமுறை தினம் வருவதால், அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம்

வரும் 23ம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, மத்திய அரசு விடுமுறை தினம் வருவதால், அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் #JIPMER #Puducherry
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தன்னை பிரிந்து வாழும் தன் மனைவி பீலா தங்கியுள்ள வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தன்னை பிரிந்து வாழும் தன் மனைவி பீலா தங்கியுள்ள வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. #RajeshDas
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை தொடங்க இருந்த 2024ம் ஆண்டுக்கான அரசு சித்திரைப் பொருட்காட்சி, கனமழை எச்சரிக்கை காரணமாக வரும் மே 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை தொடங்க இருந்த 2024ம் ஆண்டுக்கான அரசு சித்திரைப் பொருட்காட்சி, கனமழை எச்சரிக்கை காரணமாக வரும் மே 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Madurai
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இக்கூட்டத்தில் மேகதாட்டு அணை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இக்கூட்டத்தில் மேகதாட்டு அணை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. #CauveryIssuer #MekadatuDam #Karnataka
account_circle